Thursday 16 February 2012

மீண்டும் பழைய கூட்டில்...

இந்தப் பக்கங்களில் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.  தனி இணையதளத்துக்குப் புதுக்குடித்தனம் போனதால் இந்த வீடு நீண்ட காலமாகப்  பூட்டிக் கிடந்தது.  

இப்போது அந்த வீட்டை யாரோ சில பங்களாதேஷ் விஷமிகள் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   திங்கட்கிழமை என்னுடைய வலைத்தளத்தை திறந்தபோது தொடர்பே இல்லாமல் என்னென்னவோ வந்தது.  சில படங்களில் கெட்ட காரியங்களும் இருந்தன-  அடி வயிறு கலங்கி விட்டது.


ஆமாம். என்னுடைய வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.  

இப்போது அந்த வலைத்தளத்தில் இருந்த என்னடைய எல்லா அறுவைகளையும்  மீட்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  ஒரு வாரகாலம் ஆகலாம் என்று வடிவமைப்பாளர் சொல்கிறார்.  

அதனால் இன்று முதல் கொஞ்ச நாட்களுக்கு இங்கே வாசம்.  இன்று இரவு எதையாவது எழுதுகிறேன்.

1 comment:

NARAYAN said...

சனி மூலையை மீண்டும் ஆரம்பித்து உள்ளதற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.